மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்


மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2018 3:00 AM IST (Updated: 8 Dec 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று நெல்லை அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

நெல்லை, 

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோவில்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று நெல்லை அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளான வருகிற 16, 23, 30-ந்தேதி, ஜனவரி மாதம் 6-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோவில்களுக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 7 மணிக்கு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய 9 கோவில்களுக்கு சென்று அன்றைய தினம் இரவுக்குள் மீண்டும் நெல்லை புதிய பஸ்நிலையத்தை வந்தடைகிறது.

முன்பதிவு

இதற்கான கட்டண தொகை ஒருவருக்கு ரூ.500 ஆகும். சிறப்பு பஸ்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையம், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்களை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story