காமநாயக்கன்பாளையம் அருகே நூல்மில்லில் மீட்கப்பட்ட பெண் சிசு சாவு


காமநாயக்கன்பாளையம் அருகே நூல்மில்லில் மீட்கப்பட்ட பெண் சிசு சாவு
x
தினத்தந்தி 8 Dec 2018 4:00 AM IST (Updated: 8 Dec 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

காமநாயக்கன்பாளையம் அருகே நூல்மில்லில் மீட்கப்பட்ட பெண் சிசு உயிரிழந்தது.

காமநாயக்கன்பாளையம்,

பல்லடம், காமநாயக்கன்பாளையம் அருகே கேத்தனூரில் உள்ள தனியார் நூல் மில் கழிவறையில் கடந்த 5-ந்தேதி பிறந்த பெண் சிசு உயிருடன் ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்தது. இந்த பெண் சிசு மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையே காமநாயக்கன்பாளையம் போலீசார் நூல்மில்லில் குழந்தையை பெற்று போட்டு விட்டு தப்பி சென்ற தாய் யார்? என விசாரணை நடத்தினர். விசாரணையில் வதம்பசேரியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கர்ப்பிணியான அவர் தொடர்ந்து மில் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் குழந்தையை போட்டு விட்டு வீட்டுக்கு வந்தது தெரிய வந்தது. இதற்கிடையே கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிசு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.


Next Story