உங்களது 15 ஆண்டு கால ஆட்சியுடன் எனது அரசின் செயல்திறனை ஒப்பிட்டு பாருங்கள் எதிர்க்கட்சியினருக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் சவால்

உங்களது 15 ஆண்டு கால ஆட்சியுடன் எனது அரசின் செயல்திறனை ஒப்பிட்டு பாருங்கள் எதிர்க்கட்சியினருக்கு முதல்-மந்திரி பட்னாவிஸ் சவால்
x
தினத்தந்தி 8 Dec 2018 5:00 AM IST (Updated: 8 Dec 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

உங்களது கடந்த 15 ஆண்டு ஆட்சியுடன் எனது அரசின் செயல் திறனை ஒப்பிட்டு பாருங்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.

மும்பை, 

உங்களது கடந்த 15 ஆண்டு ஆட்சியுடன் எனது அரசின் செயல் திறனை ஒப்பிட்டு பாருங்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.

தேர்தல் பிரசாரம்

அகமத்நகர் மாநகராட்சிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று அகமத்நகரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

முந்தைய ஆட்சியாளர்கள் போதிய திட்டமிடல் இல்லாததால் வரலாற்று ரீதியான நகரங்களை புறக்கணித்தனர்.

ஆனால் அகமத்நகரில் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக எனது தலைமையிலான அரசு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது.

வேண்டுமானால் எனது 4 ஆண்டு ஆட்சியின் செயல்திறனையும், முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் 15 ஆண்டு ஆட்சி காலத்தின் செயல்திறனையும் ஒப்பிட்டு பாருங்கள்.

தீர்வு எட்டப்பட்டுள்ளது

உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை போன்ற விஷயங்களில் நிலவிய பிரச்சினைகளுக்கு எங்கள் ஆட்சி காலத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அகமத் நகரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தாலுகா அளவிலான தலைவர்கள் தான், யாரும், மாநில அளவிலான தலைவர்கள் இல்லை

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story