மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு அழைத்து வந்துகனடா இளம்பெண்ணை மானபங்கம் செய்த 2 பேர் கைது + "||" + Bring home Canada's young girl Who raped 2 people arrested

வீட்டுக்கு அழைத்து வந்துகனடா இளம்பெண்ணை மானபங்கம் செய்த 2 பேர் கைது

வீட்டுக்கு அழைத்து வந்துகனடா இளம்பெண்ணை மானபங்கம் செய்த 2 பேர் கைது
வீட்டிற்கு அழைத்து வந்து கனடா இளம்பெண்ணை மானபங்கம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

வீட்டிற்கு அழைத்து வந்து கனடா இளம்பெண்ணை மானபங்கம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மது குடித்தனர்

கனடாவை சேர்ந்த 24 வயது இளம்பெண் தனது ஆண் நண்பருடன் மும்பைக்கு சுற்றுலா வந்திருந்தார். இவர் நண்பருடன் சம்பவத்தன்று இரவு ஜூகுவில் உள்ள மதுபான விடுதியில் மது குடித்து கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்கு டெல்லியை சேர்ந்த அமர்தீப் சிங்(வயது29), சாகிப் சிங் (40) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.

இந்தநிலையில் மதுபான விடுதி மூடும் நேரம் வந்தவுடன் அமர்தீப் சிங் கோரேகாவில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி வெளிநாட்டு ஜோடியை அழைத்தார். அவர்களும் வாலிபரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றனர். 4 பேரும் அதிகாலை 3.30 மணி வரை மது குடித்தனர். பின்னர் தூங்கச்சென்றனர்.

மானபங்கம்

இந்தநிலையில் 5 மணியளவில் அமர்தீப்சிங், சாகிப்சிங் ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்த கனடா இளம்பெண்ணை மானபங்கம் செய்தனர். யாரோ தன்னை தொடுவதை உணர்ந்த பெண் தூக்கத்தில் இருந்து எழுந்தார். பின்னர் அவர் நடந்த சம்பவம் குறித்து பங்குர்நகர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனடா இளம்பெண்ணை மானபங்கம் செய்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை