மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் + "||" + Plastic Eradication Awareness Rally

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் அரியலூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரியலூர், 

ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பஸ் நிலையம், தேரடி, சத்திரம் வழியாக சென்று நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் துணிப்பைகளை வழங்கினார். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேரலாதன், நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, உதவிப்பொறியாளர்கள் பிரபாகரன், இளமதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை: ஊட்டி, கோத்தகிரியில் ரூ.71 ஆயிரம் அபராதம் வசூல்
ஊட்டி, கோத்தகிரியில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ரூ.71 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
2. சிவகாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
சிவகாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
3. திருப்பூரில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூரில் 2 கடைகளில் இருந்து 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்பு
ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் நடராஜன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.