மாவட்ட செய்திகள்

பாதாள சாக்கடைபணி முடிந்த பகுதிகளில் 31 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படும் - வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் பேட்டி + "||" + At the end of the underground sewage, the road will be set

பாதாள சாக்கடைபணி முடிந்த பகுதிகளில் 31 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படும் - வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் பேட்டி

பாதாள சாக்கடைபணி முடிந்த பகுதிகளில் 31 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படும் - வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் பேட்டி
பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடைப்பணி முடிந்த பகுதிகளில் 31 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்படும் என்று வடிகால்வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஷ்வரன் கூறினார்.
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ரூ.109 கோடியே 62 லட்சம் செலவில் பாதாள சாக் கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஷ்வரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய் தார். வெங்கடேசா காலனி, மகாலட்சுமி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அவர் சரியான முறையில் குழாய் பதிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்தும், பணி கள் முடிந்த பகுதியில் அமைக் கப்பட்டு உள்ள சாலைகளின் தரம் குறித்தும் ஆய்வு நடத்தினார்.


அப்போது குடிநீர் வடிகால் வாரிய இயக்குனர் சந்திரசேகர், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், நகராட்சி கமிஷனர் கண்ணன், என்ஜினீயர் முருகேசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. 191 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற வேண்டும். இதில் 128 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து உள்ளது. 7907 ஆள்இறங்கு குழிகள் அமைக்க வேண்டியதில், 6620 ஆள்இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை பணிகள் முடிந்ததும் நகரில் 16,050 வீட்டு இணைப்புகள் கொடுக்க வேண்டும். தற்போது பணிகள் முடிந்த பகுதிகளில் 11959 வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

மேலும் பணிகள் முடிந்த பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 31 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க உத்தரவு பெறப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் விரைவில் சாலை அமைக்கப்படும்.

கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே 2 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதை தொடர்ந்து புதிதாக விரிவாக்கம் செய்த பகுதிகளுக்கு பில்லூர்-3 குடிநீர் திட்டம் ரூ.980 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழகத்திலேயே மிகப்பெரிய கூட்டுக்குடிநீர் திட்டமாகும்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் தினமும் 318 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படும். குடிநீர் திட்ட பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

பவானி ஆற்றில் சமயபுரம் என்ற இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும். இந்த திட்டத்திற்கு 162 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது.

இதில் 37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மாவட்ட கலெக்டர் மூலம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தனியாரிடம் உள்ள 125 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தேசமாக ரூ.150 கோடி தேவைப்படும். மேலும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கோவை மாநகராட்சி மூலம் இழப்பீடு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.