மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக தேர்வுகள் 15-ந் தேதி தொடக்கம் பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக தேர்வுகள் 15-ந் தேதி தொடக்கம் பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2018 3:00 AM IST (Updated: 9 Dec 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக தேர்வுகள் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக தேர்வுகள் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தேர்வு மையங்கள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்கக தேர்வுகள் மற்றும் துணை தேர்வுகள் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி வரை நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு கீழ்க்கண்ட தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.

நெல்லை- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை, தென்காசி- ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சி, பாபநாசம்- திருவள்ளுவர் கல்லூரி, புளியங்குடி- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி, டி.என்.புதுக்குடி, தெற்கு கள்ளிகுளம்- தட்சணமாற நாடார் சங்க கல்லூரி, தூத்துக்குடி- காமராஜ் கல்லூரி, சாத்தான்குளம்- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, கோவில்பட்டி- எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி, நாகர்கோவில்- ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, மார்த்தாண்டம்- நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

அனுமதிச்சீட்டு

தேர்வு அட்டவணை, தேர்வு மையம் மற்றும் தேர்வு அனுமதிச்சீட்டு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வு அனுமதிச்சீட்டை www.msun-iv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் DD&CE¸ December 2018 Exam Hall Ticet என்பதில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு அனுமதிச்சீட்டு மற்றும் தொலைநெறி தொடர்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story