எட்டயபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
எட்டயபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
விவசாயிகள் முற்றுகை
எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி, அயன் வடமலாபுரம், கீழ்நாட்டுகுறிச்சி, அயன் கரிசல்குளம், சுரைக்காய்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த கிராமங்களின் கணக்குகளை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர்.
இதனால் கிராம நிர்வாக அலுவலர் இல்லாத கிராமங்களில் விவசாயிகள் பயிர் அடங்கல் பெற முடியவில்லை. இதனால் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரிமீயத்தொகை செலுத்த முடியவில்லை. இதனைக் கண்டித்து, மாசார்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். 5-வது தூண் தலைவர் சங்கரலிங்கம், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், மாசார்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தினகரன், ஆதிநாராயணன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முற்றுகையிட்டவர்களிடம், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, எட்டயபுரம் தாசில்தார் வதனாள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் இல்லாத கிராமங்களில் விவசாயிகளுக்கு வருவாய் ஆய்வாளர் மூலம் பயிர் அடங்கல் வழங்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story