தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் தேர்தல் நிதி வைகோவிடம் வழங்கப்பட்டது

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் தேர்தல் நிதி வைகோவிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 9 Dec 2018 3:30 AM IST (Updated: 9 Dec 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் செல்லச்சாமி, அவைத்தலைவர் ஜெபசிங் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். 

அவர் ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் குறித்தும் தேர்தல் பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கி பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ.5 லட்சத்தை மாவட்ட செயலாளர் செல்வம், பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கினார்.

Next Story