மாவட்ட செய்திகள்

ராயக்கோட்டை அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 17 யானைகள் + "||" + Near Raayakottai 17 elephants that have destroyed the crops of agricultural crops

ராயக்கோட்டை அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 17 யானைகள்

ராயக்கோட்டை அருகே
விவசாய பயிர்களை நாசம் செய்த 17 யானைகள்
ராயக்கோட்டை அருகே விவசாய பயிர்களை 17 யானைகள் நாசம் செய்தன.
ராயக்கோட்டை,

ராயக்கோட்டை அருகே உள்ளது ஊடேதுர்க்கம் ஊராட்சி. இதற்கு உட்பட்டது கூத்தனப்பள்ளி. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் சித்தன், ரவிச்சந்திரன், மதியழகன். விவசாயிகள். இவர்கள் வாழைத்தோட்டம் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஊடேதுர்க்கம் காட்டில் இருந்து 7 யானைகள் அந்த பகுதிக்கு வந்தன. இதே போல தேன்கனிக்கோட்டை காட்டில் இருந்து 10 யானைகளும் அங்கு வந்தன. இந்த 17 யானைகளும், விவசாயிகள் 3 பேரின் வாழைத்தோட்டங்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது.

இதே போல நாகமங்கலத்தில் விவசாயி முனியப்பன் என்பவரின் ராகி, தென்னை பயிர்களையும், அதே ஊரைச் சேர்ந்த திம்மராயன் என்ற விவசாயிக்கு சொந்தமான வாழை, தென்னை தோட்டங்களையும் யானைகள் நாசப்படுத்தின. இதே போல யு.குருபரப்பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தையும் யானைகள் நாசப்படுத்தின. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். யானைகளின் நடமாட்டம் குறித்து ஓசூர் வனச்சரகர் சீதாராமன் கூறியதாவது:-

ஊடேதுர்க்கம் காட்டையொட்டி இரவு நேரத்தில் யாரும் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அங்கு கொண்டு செல்ல வேண்டாம். அதே போல இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் யாரும் காவலுக்கு இருக்க வேண்டாம். யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நொகனூர் காப்புக்காட்டில் 75 யானைகள் முகாம் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம்
நொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ள 75 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
2. நொகனூர் காட்டில் முகாமிட்டிருந்த 40 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
நொகனூர் காட்டில் முகாமிட்டிருந்த 40 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
3. ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு மேலும் 20 யானைகள் வந்தன விவசாயிகள் கவலை
ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு மேலும் 20 காட்டு யானைகள் வந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
4. விழா முடிவடைந்ததையொட்டி தசரா யானைகள் இன்று முகாம்களுக்கு திரும்புகின்றன
தசரா விழா முடிவடைந்ததையொட்டி அர்ஜூனா யானை உள்பட 12 யானைகளும் இன்று யானைகள் முகாம்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.
5. யானைகள் வழித்தட விவகாரம்: விடுதி உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
யானைகள் வழித்தட விவகாரம் தொடர்பாக தனியார் விடுதி உரிமையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.