மாவட்ட செய்திகள்

கஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு + "||" + KALA storm cotton plants slaughtered: poisoned peasant die

கஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு

கஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு
கஜா புயலின் போது பருத்தி செடிகள் நாசமானதால் மனமுடைந்து விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் கீழ எசனை கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 40). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் ராமர் வட்டிக்கு கடன் வாங்கி அவரது வயலில் பருத்தி பயிரிட்டிருந்தார். கடந்த மாதம் கஜா புயலின் போது பெய்த கனமழையால் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி செடிகள் நீரில் சாய்ந்து நாசமாயின. மறுநாள் வழக்கம்போல் வயலுக்கு சென்ற ராமர் பருத்தி செடிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் மனமுடைந்து தனது நிலத்திலேயே பயிருக்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி செடிகள் நாசமானதால் நான் (ராமர்) விஷம் குடித்துவிட்டேன் என்று கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது மனைவி மஞ்சுளா அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ராமரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ராமர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராமருக்கு மாலினி(8) என்ற மகளும், கபிலன்(3) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆற்றில் மூழ்கி பி.எஸ்.என்.எல். ஊழியர் சாவு மது போதையில் குளிக்க சென்ற போது பரிதாபம்
மார்த்தாண்டம் அருகே மது போதையில் குளிக்க சென்ற பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
2. புயலில் மரம் விழுந்ததால் மின்கம்பி தண்ணீரில் மூழ்கியது: வாய்க்காலில் இறங்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
கோட்டூர் அருகே கஜா புயலில் சாய்ந்த மரம் மின்கம்பி மீது விழுந்ததால் மின்கம்பி வாய்க்காலில் மூழ்கியது. இதை அறியாமல் வாய்க்காலில் இறங்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார்.
3. திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்
திருத்துறைப்பூண்டி அருகே சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. கண்மாயில் நீர் வற்றியதால் டேங்கர் லாரி தண்ணீர் மூலம் பயிர்களை காப்பாற்றும் விவசாயிகள்
இளையான்குடி பகுதியில் கண்மாயில் நீர் வற்றியதால், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிரை காப்பாற்றி வரும் விவசாயிகள்.
5. திருவாடானை தாலுகாவில் விலைக்கு தண்ணீர் வாங்கி வயல்களுக்கு பாய்ச்சும் விவசாயிகள்
திருவாடானை தாலுகாவில் விலைக்கு தண்ணீர் வாங்கி விவசாயிகள் வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.