மாவட்ட செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் இருந்து கம்மநாயக்கன் ஏரிக்குதண்ணீர் விடக்கோரி விவசாயிகள் போராட்டம் + "||" + From the riverbank river to the Kammanayak Lake Water ballooning farmers fight

தென்பெண்ணை ஆற்றில் இருந்து கம்மநாயக்கன் ஏரிக்குதண்ணீர் விடக்கோரி விவசாயிகள் போராட்டம்

தென்பெண்ணை ஆற்றில் இருந்து கம்மநாயக்கன் ஏரிக்குதண்ணீர் விடக்கோரி விவசாயிகள் போராட்டம்
தென்பெண்ணை ஆற்றில் இருந்து கம்ம நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் விட வலியுறுத்தி ஏரியில் நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள கம்மநாயக்கன் ஏரியின் மூலம் வஜ்ஜிரபள்ளம் போடம்பட்டி, எல்லப்பன் கொட்டாய், பாலிகானூர், காளான்கொட்டாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினரும், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் வறண்டு போனதால், குடிநீருக்கே கடும் சிரமம் அடைந்து வருவதாக வேதனையுடன் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று வஜ்ஜிரபள்ளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வறண்ட ஏரியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அழியாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் முடிந்து, திட்ட மதிப்பீடு தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கம்மநாயக்கன் ஏரியை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இணைக்கப்படவில்லை. எங்களது வாழ்வாதாரத்தை காக்க ஏரிக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரத்தில், கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள் - குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பயிர் இழப்பீட்டு தொகை கேட்டு கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2. இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு: பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு
காட்டுமன்னார்கோவில் அருகே இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்த முயன்ற தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகை
உளுந்துக்கு கூடுதல் விலை கேட்டு விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
4. கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் தண்டவாளத்தில் படுத்து விவசாயிகள் போராட்டம்
வடமதுரை அருகே கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: வயலில் படுத்து விவசாயிகள் போராட்டம் 15 பெண்கள் உள்பட 77 பேர் கைது
சென்னிமலை அருகே விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வயலில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 77 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை