பட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தாயில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாயில்பட்டி,
சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளால் பட்டாசு தொழிலை நடத்துவது இயலாத காரியம் என ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்து பட்டாசுஆலைகளை இழுத்து மூடி விட்டனர். இதனால் அதனை நம்பி வாழ்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தாயில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் வேல்பாண்டி தலைமை தாங்கினார். துணை செயலாளர் வைரபிரகாசம், இலக்கிய அணி பரமசிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story