காவி ஆடை அணிந்திருப்பவர்கள் அனைவரும் சன்னியாசிகள் கிடையாது சித்தராமையா பேச்சு
காவி ஆடை அணிந்திருப்பவர்கள் அனைவரும் சன்னியாசிகள் கிடையாது என்று சித்தராமையா தெரிவித்தார்.
கொள்ளேகால்,
காவி ஆடை அணிந்திருப்பவர்கள் அனைவரும் சன்னியாசிகள் கிடையாது என்று சித்தராமையா தெரிவித்தார்.
பூமி பூஜை
சாம்ராஜ்நகர் அரசு மருத்துவ கல்லூரியின் பின்புறம் ரூ.10 கோடி செலவில் புதிதாக பல்கலைக்கழகம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்யும் விழா நேற்று நடந்தது. இதில், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்துகொண்டு பல்கலைக்கழக பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். பின்னர் நடந்த விழாவை அவர்கள் 2 பேரும் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அந்த விழாவில் சித்தராமையா பேசியதாவது:-
எச்சரிக்கையுடன் பேச வேண்டும்
தர்மத்தை பற்றி பேசும்போது மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும். அவ்வாறு எச்சரிக்கையுடன் பேசவில்லை என்றால், அது நமக்கே ஆபத்தாக முடியும். காவி ஆடை அணிந்திருப்பவர்கள் அனைவரும் சன்னியாசிகள் கிடையாது. அவர்களை போன்றவர்களை யாரும் நம்ப வேண்டாம். இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு எதிரி, மற்றொரு மனிதனே. மேல் இருப்பவர்களின் காலை பிடித்து இழுத்து கீழே தள்ள, பல பேர் முயற்சி செய்வார்கள். லிங்காயத் சமுகத்திற்கு தனிமத அங்கீகாரம் கொடுக்கும் முடிவை நாங்கள் எடுக்கவில்லை. சில மடாதிபதிகள் என்னை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பரமேஸ்வர்
முன்னதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். பா.ஜனதாவினர் கூட்டணி அரசு பற்றி தேவையில்லாத பொய்களை கூறி வருகிறார்கள். மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் சரியான முறையில் தான் இயங்கி கொண்டிருக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story