பொக்லைன் எந்திரத்தை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு


பொக்லைன் எந்திரத்தை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு
x
தினத்தந்தி 9 Dec 2018 3:30 AM IST (Updated: 9 Dec 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

பொக்லைன் எந்திரத்தை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பொன்னேரி, 

பொன்னேரியை அடுத்த இலவம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ‘வாட்டர் வாஷ் சர்வீஸ் சென்டர்’ உள்ளது. இங்கு மீஞ்சூரை அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 39) என்பவரும், அசாம் மாநிலத்தை சேர்ந்த சலாம் (35) என்பவரும் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பொக்லைன் எந்திரத்தை சுத்தம் செய்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது.

சாவு

இதில் பாலமுருகன், சலாம் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story