மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகேமூதாட்டியை கொன்று நகை கொள்ளை + "||" + Grandmother killed a jewelry robbery

காஞ்சீபுரம் அருகேமூதாட்டியை கொன்று நகை கொள்ளை

காஞ்சீபுரம் அருகேமூதாட்டியை கொன்று நகை கொள்ளை
காஞ்சீபுரம் அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். விவசாயி, இவரது மனைவி பார்வதியம்மாள் (வயது 60). இவர் திருப்புட்குழி ஏரிக்கரை பகுதியில், தனது எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். நீண்ட நேரம் ஆகியும் பார்வதியம்மாள் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஏரிப்பகுதியின் முள்புதரில் ஒரு பெண் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக பாலுச்செட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

நகை திருட்டு

பிணமாக கிடப்பது பார்வதியம்மாள் என்பது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி, காதில் அணிந்திருந்த 2 தோடுகளை திருடி அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

இதற்கிடையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.