4 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு வலைவீச்சு


4 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Dec 2018 4:00 AM IST (Updated: 9 Dec 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

வடலாவில் 4 சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

வடலாவில் 4 சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை

மும்பை சயான், பிரதீக்சாநகர் பகுதியில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் 10 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.

பின்னர் அவர் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுவர்கள் 4 பேரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அந்த வாலிபர் சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

வாலிபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெற்றோரிடம் கூறினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வடலா டி.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Next Story