பெரம்பலூர் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்


பெரம்பலூர் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 9 Dec 2018 10:30 PM GMT (Updated: 9 Dec 2018 7:54 PM GMT)

பெரம்பலூர் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக குளியல் போட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வப்போது லேசான மழை பெய்தது. தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லும் போது குடை பிடித்தவாறு செல்வதை காண முடிந்தது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் சுற்றிப்பார்ப்பதற்கு எதுவும் சொல்கிற அளவுக்கு சுற்றுலா தலம் அதிகம் கிடையாது. பெரம்பலூர் நகரில் பொழுதுபோக்கிற்கு திரையரங்குகள் மற்றும் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் சிறுவர் அறிவியல் பூங்கா உள்ளது. பூங்காவும் மாலை நேரங்களில் தான் திறக்கப்படுகிறது.

இதனால் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதாலும், வெயிலை சமாளிப்பதற்காக நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வந்த வண்ணம் இருந்ததை காணமுடிந்தது. இதில் நிறைய பேர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் நீச்சல் குளத்தில் உற்சாகமாக ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் குளியலை போட்டு வெயிலின் கொடுமையை சமாளித்தனர். 

Next Story