பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
ராமநாதபுரம் அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவருகிறார்கள்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் அம்மன்கோவில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சேர்ந்த முருகையா மகன் முத்துக்குமார் (22) என்பவருக்கும் 19 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துக்குமார்,அந்த பெண்ணுடன் ஒன்றாக படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். இதனை வைத்து அந்த பெண்ணை முத்துக்குமார் மிரட்டி வந்தாராம். இதுகுறித்து அந்தபெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம்பாள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story