எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட பணிகள் ஆணைக்குழு உதவி செய்யும் நீதிபதி பேச்சு


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட பணிகள் ஆணைக்குழு உதவி செய்யும் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 9 Dec 2018 10:45 PM GMT (Updated: 2018-12-10T02:00:32+05:30)

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சட்ட பணிகள் ஆணைக்குழு உதவி செய்யும் என நீதிபதி தங்கவேல் கூறினார்.

கரூர்,

மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் உலக எஸ்ட்ஸ் தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் கரூரில் நடந்தது. இந்த முகாமுக்கு, அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா தலைமை தாங்கினார். டாக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

சட்ட உதவிகள்

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கவேல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை சமூகத்தில் புறந்தள்ளாமல் நம்மில் ஒருவராக கருத வேண்டும். அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்து தர சட்ட பணிகள் ஆணைக்குழு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் சொக்கலிங்கம், வக்கீல்கள், அரசு மருத்துவமனை டாக்டர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story