20 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் வைகோ பேச்சு


20 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 10 Dec 2018 4:00 AM IST (Updated: 10 Dec 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

விளாத்திகுளம், 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பணிக்குழு செயல்வீரர்கள் கூட்டம், விளாத்திகுளத்தில் உள்ள அக்கம்மாள்திருமண மண்டபத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், தூத்துக்குடி தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., புதூர் ஒன்றிய செயலாளர் எரிமலை வரதன், நகர செயலாளர் வேலுசாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிராஜ் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;-

மேகதாதுவில் அணை கட்ட போகிறார்கள். நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றினால், இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட போகிற மாநிலம் தமிழகம் தான். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் ஆலைநிர்வாகத்துக்கு பக்கபலமாக உள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடைகோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த உள்ளது. 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் கண்டிப்பாக வரும். இதில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். ராமர் கோவில் கட்டுவது என்ற பெயரில் இந்து, முஸ்லிம் மக்களிடையே ரத்தக்களறியை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் ஜெயக்குமார், மாரிமுத்து, நகர செயலாளர் வேலுசாமி, புதூர்ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story