மால்வாணியில் குடோனில் பயங்கர தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
மால்வாணியில் உள்ள குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
மும்பை,
மால்வாணியில் உள்ள குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
மும்பை மலாடு அருகே மால்வாணி கரோடி நகர் குடிசைப்பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் பந்தல் போடுவதற்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில், நேற்று மதியம் திடீரென இந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி, தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தீ குடிசை வீடுகளுக்கு பரவியதால், குடிசைவாசிகள் தங்கள் வீட்டில் இருந்த, கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் உடைமைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.
பொருட்கள் எரிந்து நாசம்
அவர்கள், ராட்சத குழாய் மூலம் குடோன் மற்றும் குடிசை வீடுகளில் பற்றிய தீயை சுமார் 2 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் அருகில் உள்ள குடிசை வீடுகளும் சேதமடைந்தன. தகவல் அறிந்த மால்வாணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story