ஜல்னா மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு


ஜல்னா மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Dec 2018 4:30 AM IST (Updated: 10 Dec 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

ஜல்னா மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த என்ஜினீயர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கமோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஜல்னா, 

ஜல்னா மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த என்ஜினீயர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கமோட்டார் வாகனதீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தீர்ப்பாயத்தில் வழக்கு

ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் ஆஷிஷ் வினோத்குமார். இவர் கட்டுமான என்ஜினீயராகவும், ஒப்பந்ததாரராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி வேலை முடிந்து எஸ்.யு.வி. காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது மும்பை- அகமத்நகர் நெடுஞ்சாலையில் உள்ள விஜய்பூர் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆஷிஷ் வினோத்குமார் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 9 மாத சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். இந்த நிலையில் ஆஷிஷ் வினோத்குமாரின் குடும்பத்தினர் விபத்துக்கு காரணமான கார் டிரைவர் மற்றும் காப்பீடு நிறுவனம் சேர்ந்து இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி மோட்டார்வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ரூ.1 கோடியே 5 லட்சம்

இந்த வழக்கு விசாரணையில் டிரைவர் வேகமாக கார் ஓட்டியதாலேயே விபத்து நிகழ்ந்தது உறுதியானது. அதுமட்டும் அல்லாமல் உயிரிழக்கும்போது ஆஷிஷ் வினோத்குமாருக்கு 30 வயது தான் ஆகியிருந்தது. மேலும் மாதம் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரம் சம்பாதித்து வந்ததாக தெரிகிறது.

இவற்றை கருத்தில் கொண்டு விபத்துக்கு காரணமான காரின் உரிமையாளரும், காப்பீட்டு நிறுவனமும் இணைந்து ரூ. 63 லட்சத்து 80 ஆயிரம் இழப்பீடு தொகையையும், 9 சதவீத வட்டியையும் சேர்த்து, பலியான ஆஷிஷ் வினோத்குமார் குடுபத்திற்கு ரூ.1 கோடியே 5 லட்சம் வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

Next Story