‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஆரணியில் மூடப்பட்ட கிளைச்சிறையை நீதிபதி ஆய்வு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பேட்டி


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஆரணியில் மூடப்பட்ட கிளைச்சிறையை நீதிபதி ஆய்வு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2018 4:15 AM IST (Updated: 10 Dec 2018 9:34 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஆரணியில் மூடப்பட்ட கிளைச்சிறையை மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு செய்தார். அப்போது விரைவில் சிறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

ஆரணி, 

ஆரணி கோட்டை மைதானம் எதிரே குதிரை லாயத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வந்த கிளைச்சிறை செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று ‘தினத்தந்தி’யின் நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று மாவட்ட நீதிபதி மகிழேந்தி மூடப்பட்டுள்ள ஆரணி கிளைச்சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.தேவநாதன், சார்பு நீதிபதி எஸ்.எழில்வேலவன், மாஜிஸ்திரேட்டு எஸ்.மகாலட்சுமி, அரசு வக்கீல் வி.வெங்கடேசன், வக்கீல் சங்க முன்னாள் தலைவர் எ.சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.


பின்னர் நீதிபதி மகிழேந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘சிறைக்காவலர் அன்பரசு மற்றும் வேலூர் மத்திய சிறையில் இருந்து சிறைக்காவலர் சுரேஷ் என்பவர் மாறி மாறி ஆரணி கிளைச்சிறையை பராமரித்து வருகின்றனர்.

கிளைச்சிறை நல்ல நிலையில் உள்ளது. சில இடங்களில் பராமரிப்புகள் மேற்கொண்டு சட்ட அமைச்சருக்கும், மாநில சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து விரைவில் கிளைச்சிறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்றார்.

Next Story