பேரிடர் காலங்களிலும் தடைபடாத சேவையை பி.எஸ்.என்.எல். மட்டுமே வழங்குகிறது தர்மபுரியில் பொதுமேலாளர் பேட்டி


பேரிடர் காலங்களிலும் தடைபடாத சேவையை பி.எஸ்.என்.எல். மட்டுமே வழங்குகிறது தர்மபுரியில் பொதுமேலாளர் பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2018 4:00 AM IST (Updated: 11 Dec 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் காலங்களிலும் தடைபடாத தொலை தொடர்பு சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே வழங்குகிறது என்று நிறுவன பொதுமேலாளர் தர்மபுரியில் கூறினார்.

தர்மபுரி, 

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தர்மபுரி தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் வெங்கட்ராமன் தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன், பிராட்பேன்டு மற்றும் எப்.டி.டி.எச். சந்தாதாரர்களுக்கு கேஷ்பேக் என்ற புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகை வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். இதன்படி ஒரு சந்தாதாரர் தன்னுடைய தொலைபேசி இணைப்பில் ஆண்டு வாடகை கட்டினால் அவருடைய கணக்கில் 25 சதவீதம் வரை வரவு வைக்கப்படும். 6 மாத வாடகை செலுத்துவோருக்கு 15 சதவீத கேஷ்பேக் வரவு வைக்கப்படும். இலவசமாக இந்தியா முழுவதும் ரோமிங் மற்றும் இலவச இன்கமிங் அழைப்பு வசதியை பி.எஸ்.என்.எல். மட்டுமே வழங்குகிறது.

புதுவசந்தம் திட்டத்தில் ரூ.45 செலுத்தி புதிய இணைப்பை பெறுபவர்கள் முதல் 15 நாட்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். 1000 எஸ்.எம்.எஸ்.கள் இலவசம். 15 நாட்களுக்கு ஒரு ஜி.பி. டேட்டா இலவசம். இதன் வேலிடிட்டி 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அமலில் இருக்கும். இதனால் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்து வேலிடிட்டி புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இத்தகைய சலுகை திட்டங்கள் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் அதிக அளவில் சந்தாதாரர்கள் மற்ற தனியார் நிறுவனங்களில் இருந்து விலகி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைந்து உள்ளனர். இந்த மாதத்தில் ஒரு சந்தாதாரர் வெளியேறினால் 20 சந்தாதாரர்கள் இணையும் நிலை உருவாகி உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை 8,500 சந்தாதாரர்கள் மற்ற நிறுவனங்களில் இருந்து விலகி இங்கு இணைந்து உள்ளனர். இயற்கை பேரிடரின் போதும் தடைபடாத சேவையை வழங்கி வருகிறோம். கஜா புயலின்போது தடைபடாத சேவையை டெல்டா மாவட்டங்களில் வழங்கி ஏகோபித்த வரவேற்பை பெற்று உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story