சிதம்பரத்தில்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - தாய் கண்டித்ததால் விபரீத முடிவு


சிதம்பரத்தில்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - தாய் கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 11 Dec 2018 3:30 AM IST (Updated: 11 Dec 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம், 

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கே.ஆர்.எம்.நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி இந்திரா(வயது 45). இவர்களுடைய மகள் ரத்தினபிரியா(21). இவர் சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து முடித்திருந்தார். மேலும் இவர் 3 பாடத்தில் ‘அரியர்’ வைத்திருந்ததால், தற்போது நடைபெற்று வரும் தேர்வை எழுதி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரத்தினபிரியா, தேர்வுக்கு படிக்காமல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தள்ளார். அப்போது இந்திரா, செல்போனில் விளையாடாமல் தேர்வுக்கு படிக்கும் படி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்திரா அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது வீட்டில் கதவின் உள்பக்க தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை தட்டியும், ரத்தினபிரியா திறக்கவில்லை.

இதையடுத்து ஜன்னல் வழியாக இந்திரா பார்த்த போது அங்குள்ள ஒரு அறையில் ரத்தினபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் ரத்தினபிரியா சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் ரத்தினபிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story