அரசு வேலை வழங்கக்கோரி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி


அரசு வேலை வழங்கக்கோரி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 11 Dec 2018 12:00 AM GMT (Updated: 10 Dec 2018 9:53 PM GMT)

அரசு வேலை வழங்கக்கோரி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த வாரணவாசியை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் கிராம நிர்வாக உதவியாளர் பணியில் சேருவதற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து வேலை கிடைக்க வில்லை.

இதனால் செல்வம், மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் செல்வம், அடிக்கடி வேலை வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வந்தார்.

மேலும் வறுமையின் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த செல்வம், நேற்று காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனைவியுடன் வந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் பொன்னையாவை நேரில் சந்தித்து, தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன்னுடைய தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

செல்வத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story