நெல்லையில் பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


நெல்லையில் பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 12 Dec 2018 3:30 AM IST (Updated: 11 Dec 2018 6:43 PM IST)
t-max-icont-min-icon

பாரதியார் பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை, 

பாரதியார் பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரதியார் பிறந்தநாள் விழா 

மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா நெல்லையில் நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை சந்திப்பில் ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், பொருளாளர் ராஜேஷ்முருகன், மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா, சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஹனஸ்ராஜா, மண்டல தலைவர் தனசிங்பாண்டியன், மாரியப்பன், பாளையங்கோட்டை வட்டார தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா 

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், எஸ்.சி. அணி மாநில துணைதலைவர் முருகதாஸ், மாவட்ட செயலாளர் முத்துபலவேசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரசார் மாநில செயலாளர் சரவணன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ரமேஷ்செல்வன், மாவட்ட தலைவர் ஜெரீனா, நிர்வாகிகள் ஜெகநாதராஜா, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மாநில பொதுச்செயலாளர் பிரிசில்லாபாண்டியன் தலைமையில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில துணைபொதுச்செயலாளர் நெல்லையப்பன், தென்மண்டல செயலாளர் அழகர்சாமி, கண்மணிமாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகில பாரத பிராமணர் சங்கத்தினர் தலைவர் குளத்துமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் துணைதலைவர் நடராஜன், மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் ஐஸ்வர்யா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 நெல்லை மாவட்ட சிவாஜி மன்றத்தினர் தலைவர் சிவாஜிசெல்வராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். துணைதலைவர் முத்துக்குமார், லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரதியார் உலக பொதுசேவை நிதியத்தின் சார்பில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலைவர் மரியசூசை, செயலாளர் கணபதி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் உறுதி மொழி ஏற்றனர். பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளி மாணவிகள் பாரதியார் வேடம் அணிந்து வந்து நடனம் ஆடி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். மாற்றுத்திறனாளிகள் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் படித்த வகுப்பறையில் நேற்று மாணவ–மாணவிகள் பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

Next Story