தூத்துக்குடியில் விமான நிலைய ஊழியர்கள் உண்ணாவிரதம் தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு
திருவனந்தபுரம் உள்ளிட்ட பல விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தூத்துக்குடி விமானநிலையத்தில் ஊழியர்கள் 2 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
தூத்துக்குடி,
திருவனந்தபுரம் உள்ளிட்ட பல விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தூத்துக்குடி விமானநிலையத்தில் ஊழியர்கள் 2 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர். இன்றும் இந்த போராட்டம் நடக்கிறது.
தனியார் மயம்
திருவனந்தபுரம், கவுகாத்தி, மங்களூரு, அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ ஆகிய விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதனை கண்டித்து இந்திய விமான நிலைய ஆணைய குழும பணியாளர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் உணவு நேர இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2–வது கட்டமாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.
உண்ணாவிரதம்
அதன்படி தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று 2 நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு சங்க கிளை தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் செய்யது மாகின் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தின் போது, விமானநிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றும்(புதன்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story