கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு திரேஸ்புரம் மீனவர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள் திரேஸ்புரத்தில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடி,

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமை தாங்கி, நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், திரேஸ்புரம் மீனவர்கள் சார்பாக மாநில மீனவரணி செயலாளர் தங்கமுத்து, மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் மாரிலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதே போல் தூத்துக்குடி மாவட்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, போர்வை, கொசுவலை, உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் அப்பாஸ், மாவட்ட தலைவர் காதர்கனி, மாவட்ட பொருளாளர் சவுபர் சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story