நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகை பதிவில் திருப்பூர் எம்.பி. சத்யபாமா முதலிடம்


நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகை பதிவில் திருப்பூர் எம்.பி. சத்யபாமா முதலிடம்
x
தினத்தந்தி 11 Dec 2018 11:15 PM GMT (Updated: 11 Dec 2018 7:07 PM GMT)

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகை பதிவில் திருப்பூர் எம்.பி. சத்யபாமா முதலிடம் பிடித்துள்ளார்.

திருப்பூர்,

கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய அளவில் ஒட்டு மொத்த எம்.பி.க்களின் வருகை பதிவேடு 80 சதவீதமாக உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 63.6 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை எம்.பி.க்களின் வருகை பதிவேடு 78 சதவீதமாகும். விவாதங்களில் பங்கேற்பு 43.6 சதவீதம். அதே நேரத்தில் சராசரியாக 404 கேள்விகள் எழுப்பி உள்ளனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி சத்யபாமா எம்.பி. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 87 சதவீதம் நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் கேட்டுள்ளார்.

இது குறித்து சத்யபாமா எம்.பி. கூறியதாவது:–

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எனது தொகுதியை பாதித்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளேன். அவற்றில் திருப்பூர் ஜவுளித்துறை, வேளாண்மை, நீர் ஆதாரங்கள், ஜி.எஸ்.டி.பெரும்பாலானவை ரெயில்வே சம்பந்தப்பட்டவை. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு போன்ற பிரச்சினைகளை யும் எழுப்பி உள்ளேன். மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பி, பதில் பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story