அந்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு: போராட்டம் நடத்த முயன்ற பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நிரந்தரமாக குடிநீர் வழங்கக்கோரி நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்த முயன்றபோது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாகனத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story