வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்திட கோரிக்கை


வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்திட கோரிக்கை
x
தினத்தந்தி 12 Dec 2018 3:45 AM IST (Updated: 12 Dec 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் கூட்டஅரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கவேல் அறிக்கை வாசித்தார். ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர்கள் சிவக்குமார் (தணிக்கை), பழனிசாமி, பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஆணை எண் 71-ன் படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்திடவேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதில் வரையறை செய்திடவேண்டும்.

ஊதியம் வழங்க வேண்டும்

கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், வீடு, உடைமைகளை இழந்தவர்களுக்கும் உதவிட மாபெரும் அளவில் நிதிதிரட்டி நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய பிடித்தம் செய்து மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில தலைவர் மணிவண்ணன், மண்டல துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணை தலைவர்கள் செந்தில்வேல், பழனியாண்டி, அமைப்பு செயலாளர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story