தேனாம்பேட்டை-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குகிறது
தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்.) வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுரங்கபாதையில் புத்தாண்டு 2-வது வாரம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னையில் 44 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தில் 34 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மீதம் உள்ள தேனாம்பேட்டை (ஏ.ஜி-டி.எம்.எஸ்.) வண்ணாரப்பேட்டை (வழி சென்டிரல்) இடையே 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டுமானப்பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. தற்போது இந்த பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை, மெட்ரோ ரெயில் திட்ட செயலாக்கத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் சென்று ஆய்வு செய்தார். ஏ.ஜி-டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதையில் நடந்து வரும் சோதனை ஓட்டம் குறித்தும், பாதுகாப்பு ஆணையரை ஆய்வுக்கு அழைப்பது, புத்தாண்டில் போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வரை நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
ஏ.ஜி-டி.எம்.எஸ்- வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் தற்போது மின்சார என்ஜின் மூலம் தீவிர சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் மற்றும் மின்சார கட்டமைப்புகளும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஏ.ஜி-டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சோதனை ரெயில், ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல், ஐகோர்ட்டு, மண்ணடி வழியாக வண்ணாரப்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது. பின்னர், ரெயில் பெட்டியில் உள்ள கதவும், பிளாட்பாரத்தில் அமைக் கப்பட்டுள்ள கதவுகளும் ஒரே நேரத்தில் முறையாக இயங்குகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் ரெயில் நிலையங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் சோதனை திருப்திகரமாக இருக்கிறது.
இந்த சோதனை ஓட்டம் இம்மாதம் இறுதி வரை நடக்க உள்ளது. அதற்கு பிறகு புத்தாண்டு முதல் வாரத்தில் பெங்களூரில் இருந்து வருகை தர உள்ள பாதுகாப்பு ஆணையர் இந்த பாதையில் ரெயிலில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். தொடர்ந்து பாதுகாப்பு ஆணையர் அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில் புத்தாண்டில் 2-வது வாரம் இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு பிறகு அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் பணிக்காக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட பகுதிகள் முழுவதும் இருவழிப்பாதையாக மாற்றப்படும். அதற்கு தேவையான சாலை தடுப்புகள் மற்றும் சிக்னல்களும் அமைத்து தரப்பட உள்ளன.
இதன் மூலம் தற்போது மெட்ரோ ரெயில் முதல்கட்ட பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டன. இதனை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் விரிவாக்கம் மற்றும் அடுத்தகட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும். திட்டமிட்ட காலத்தில் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story