இளைய சமூகத்தினர் மூத்த குடிமக்களிடம் அன்புடன் இருக்க வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுரை
இளைய சமூகத்தினர் மூத்த குடிமக்களிடம் அன்புடன் இருக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர், மாவட்ட நீதிபதி கே.அறிவொளி, சார்பு நீதிபதி எஸ்.தஸ்னீம் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்புகுளோரியா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
தமிழக அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. முதியோருக்கு சட்டரீதியான பிரச்சினைகளை தீர்க்க மாவட்டத்தில் இலவச சட்ட ஆணையக்குழு செயல்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்தி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது பெற்றோர்களை அன்பும், அரவணைப்போடு காக்க வேண்டும். மாறாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்களிடமிருந்து புகார் வரபெற்றால் பிள்ளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்ட அரசாணையின்படி பெற்றோர்கள் தங்களின் சொத்தை பிரித்து கொடுத்து பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்கவில்லையெனில் மீண்டும் பெற்றோருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர்களின் அனுபவம் தான் சிறந்த கல்வியாக திகழ்ந்து வருகிறது. நம் முன்னோர்கள் சொல்லி கொடுத்த அனுபவங்களை, அறிவுரைகளையும் மறக்கக் கூடாது.
ஆகவே சமுதாயத்தில் அனைவரும் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், இளைய சமூகத்தினர் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களிடம் அன்புடனும், அரவணைப்புடனும் இருக்க வேண்டும். இயற்கை உணவு வகைகளை உட்கொண்டு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story