5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற தேர்தலுடன் பொருத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற தேர்தலுடன் பொருத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை - டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2018 4:45 AM IST (Updated: 12 Dec 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற தேர்தலுடன் பொருத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் நேற்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிப்பதற்காக, எஸ்.சி, எம்.பி.சி, பி.சி, என்ற படி நிலைகள் உருவாக்கப்பட்டன. பிற்படுத்தப்பட்டோர் என பி.சி.க்களுக்கு பெயரிடப்பட்டது. ஆனால் எஸ்.சி, என்று 77 சமூகத்தை உள்ளடக்கிய ஒரேசாதியாக தவறுதலாக பெயரிடப்பட்டுள்ளது. அதனால் பல சமுதாயங்கள், தங்களுடைய வரலாற்று ரீதியிலான, மரபு ரீதியிலான அடையாளங்களை இழந்து வாழவேண்டிய நிலை உருவாகி உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவி இருக்கின்ற தேவேந்திரகுல வேளாளர்கள், எஸ்.சி. என்று பட்டியலிடப்பட்ட காரணத்தினால் தங்களுடைய அடையாளங்களை இழக்கவேண்டிய நிலை வந்தது. இதனால் தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து விலக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறோம். புதிய தமிழகம் கட்சி ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி 2 பேரணிகள், 4 மாநாடுகள் நடத்தி உள்ளது. இப்போது மாவட்டம்தோறும் தேவேந்திரகுல வேளாளர் சார்பாக, கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றி, அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மனுக்களை அளித்து வருகிறோம்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், மாநிலஅளவில் ஏற்பட்டதை மத்தியில் பொருத்தி பார்க்கக்கூடாது. ஒருவேளை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு பொருத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story