தேர்தல் முடிவுகள்: கொடுங்கோலன் கன்னத்தில் அறை விழுந்து உள்ளது ராஜ்தாக்கரே கருத்து


தேர்தல் முடிவுகள்: கொடுங்கோலன் கன்னத்தில் அறை விழுந்து உள்ளது ராஜ்தாக்கரே கருத்து
x
தினத்தந்தி 12 Dec 2018 5:59 AM IST (Updated: 12 Dec 2018 5:59 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முடிவுகளால் கொடுங்கோலன் கன்னத்தில் அறை விழுந்து இருப்பதாக நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் c கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை, 

ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே நேற்று தேர்தல் முடிவு குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பப்பு(குழந்தை) என்று அழைத்து கிண்டல் செய்தது. ஆனால் அவர் ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் வெற்றி மூலம் மதிப்புக்குரியவராக உயர்ந்துள்ளார்.

இந்த நாட்டிற்கு தேவையானது ராமர் கோவில் இல்லை. மாறாக ராமரின் ராஜ்யம் தேவைப்படுகிறது. கடந்த 4½ ஆண்டு ஆட்சிக்காலத்தில் இந்த அரசு மக்களுக்காக ஏதும் செய்யவில்லை. இதனால் அவர்கள் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.

கொடுங்கோலன் கன்னத்தில் விழுந்த அறை தான் இந்த தேர்தல் முடிவுகள்.

மேலும் குஜராத்திலும் பா.ஜனதாவின் செல்வாக்கு கடந்த ஆண்டில் இருந்து குறைந்து வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபையில் 99 இடங்களை மட்டுமே கடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது. 2012-ம் ஆண்டில் 115 இடங்களை கைப்பற்றி இருந்தது. அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 61-ல் இருந்து 77- ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story