உயிர் காக்கும் தொப்பி


உயிர் காக்கும் தொப்பி
x
தினத்தந்தி 12 Dec 2018 11:32 AM IST (Updated: 12 Dec 2018 11:32 AM IST)
t-max-icont-min-icon

இரவு நேரங்களில் நெடுந்தூரம் வாகனம் ஓட்டுபவர்கள் தூக்கக் கலக்கத்தில் விபத்து ஏற்படுத்தி விடாமல் இருக்க ஒரு தொப்பியை (cap) உருவாக்கி உள்ளது போர்ட் மோட்டார்ஸ் நிறுவனம்.

பெரும்பாலும் இரவில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் லாரி மற்றும் டிரக் ஓட்டுனர்களை மனதில் கொண்டே இதனை தயாரித்துள்ளனர். இந்த தொப்பியில் ஒரு சூழல்காட்டி (gyroscope ) மற்றும் துரிதப்படுத்தி (accelarator) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

இதை அணிந்து கொண்டு வண்டி ஓட்டும் போது ஓட்டுநர் சிறிது தலை அசைந்து தூக்கத்திற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது அவரது கழுத்து அசைவில் மாறுதல் ஏற்பட்டாலோ உடனடியாக அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். அதை கவனிக்கவில்லை என்றால் கண்ணை கூசக் கூடிய அளவு அதிகமான வெளிச்சத்தை கண்ணில் அடித்து எழுப்பிவிடும். இது கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் தரும் சாதனம் என்றாலும் விபத்து நேர்ந்து உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காக்கிறது என்று நினைக்கும் போது இந்த சத்தமும் வெளிச்சமும் ஒரு பொருட்டில்லை.

விரைவில் இந்த ‘சேப் கேப்’ உலகமெங்கும் விற்பனைக்கு வரப் போகிறது.

Next Story