சுற்றுலா பயணிகளுக்கு உதவும் நாற்காலி


சுற்றுலா பயணிகளுக்கு உதவும் நாற்காலி
x
தினத்தந்தி 12 Dec 2018 11:32 AM IST (Updated: 12 Dec 2018 12:02 PM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் சவுகரியமாக அமர்ந்து கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டதுதான் கோ சேர்.

இது மிக எளிதாக மடக்கக் கூடியது. உறுதியானது. இதை மடக்கினால் ஒரு லிட்டர் பாட்டில் அளவுக்குத்தான் இடத்தை ஆக்கிரமிக்கும். ஒரு செவ்வகமான பெட்டியில் 8 சேர்களை எளிதாக எடுத்துச் செல்லலாம். எடை குறைவானது. 135 கிலோ எடையைத் தாங்கக் கூடியது. அனைத்து தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்றது. துருப்பிடிக்காத வகையில் விமானங்களில் பயன்படுத்தப்படும் உயர் ரக அலுமினியத்தால் ஆனது. மலையேற்ற வீரர்களும் அவ்வப்போது இளைப்பாற இந்த சேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான ஸ்டூல் போல அல்லாமல் முதுகின் பாதியளவு வரை தாங்குவதால் நன்கு இளைப்பாற முடியும். இறக்குமதி செய்து விற்பனையாவதால் இதன் விலை ரூ.6,261 ஆகும்.

Next Story