கைக்குள்ளே ஒரு பறக்கும் கேமரா
செல்பி பிரியர்களுக்காக போனை பிடித்துக் கொள்ளக் கூடிய செல்பி ஸ்டிக்குகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நமது செல் போன் கவர் ஒரு பறக்கும் டுரோனாக (DRONE) மாறி பறந்து பறந்து நம்மை செல்பி எடுத்தால் எப்படி இருக்கும். இதென்ன மாயாஜாலமா என்று வியக்கும் வகையில் இருக்கிறது இந்த செல்பிளை (SELFLY) போன் கேஸ்.
சாதாரணமாக பார்க்கும் போது ஒரு செல்போன் கேஸ் போன்று தோற்றமளிக்கும் இது நாம் போட்டோ எடுக்க விரும்பும் போது போனில் இருந்து பிரிந்து பறக்கும் டுரோனாக விரிந்து போட்டோ எடுக்கிறது.வேலை முடிந்தவுடன் மீண்டும் சமர்த்தாக போன் கேஸ் போல மாறி உட்கார்ந்து கொள்ளும். பேட்டரியில் இயங்கும் இந்த போன் கேஸ், ஐ-போன் மற்றும் ஆண்ட்ராய்டு வகை போன்களில் ஆப் மூலம் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டுரோனில் 13 மெகா பிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எட்டு நிமிடங்கள் தொடர்ந்து போட்டோவோ அல்லது வீடியோவோ இதனை கொண்டு எடுக்க முடியும். 4 முதல் 6 அங்குலம் வரையுள்ள அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் இந்த கேஸ் பொருந்தும்.10 மி.மீ. அளவுள்ள இந்த போன் கேஸ் அசாத்தியமான வேலைகளை அட்டகாசமாக செய்கிறது.
இதன் விலை சுமார் 130 அமெரிக்க டாலர்கள்.
Related Tags :
Next Story