பன்முக பயன்பாட்டுக்கு உதவும் கீ செயின் டூல்
எவர்ராட்செட் கீ செயின் மல்டி டூல். இதைக்கொண்டு பல்வேறு வகையான பணிகளை நிறைவேற்ற முடியும்
அன்றாட வாழ்க்கையில் பல்வேறு கருவிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதனால் கையில் முக்கியமான டூல் இருப்பது அவசியமாகிவிட்டது. இத்தகைய சூழலில் கீ செயினில் எடுத்துச் செல்லும் வகையில் கையடக்கமான, பன்முக செயல்பாடுகளைக் கொண்டதாக வந்துள்ளது எவர்ராட்செட் கீ செயின் மல்டி டூல். இதைக்கொண்டு பல்வேறு வகையான பணிகளை நிறைவேற்ற முடியும். அந்த அளவுக்கு உறுதியானது. இதில் 7 வகையான நட்டு, போல்டுகளை திறக்க முடியும். அதேபோல பாட்டில் திறப்பது, பெட்டிகளைத் திறப்பது போன்ற பணிகளுக்கும் இது உதவியாக இருக்கும். இது உறுதியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது டைட்டானியம் உலோகத்தால் ஆனது.
இதன் விலை 16 டாலராகும். ஸ்குரூ ஆணிகளை பொருத்தவும், ஸ்டார் ஸ்குரூக்களை பொருத்தவும் இது எளிதில் உதவும். அவசரத்துக்கு தீப்பொறியையும் இதில் உருவாக்கமுடியும். ஸ்கேல் போல அளவெடுக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
Related Tags :
Next Story