புதிய மாடல் பைக் டிரையம்ப் ஸ்பீடு ட்வின்
இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஸ்பீடு ட்வின் எனும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
1938-ம் ஆண்டு டிரையம்ப் மாடல் மோட்டார் சைக்கிளில் ஸ்பீடு ட்வின் மிகவும் பிரபலமானதாக இருந்தது. இதையடுத்தே அதிக அளவிலான இரட்டை சிலிண்டர் மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் தயாரித்து சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது.
1,200 சி.சி. திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் இந்தப் பிரிவில் அதிக சக்தி கொண்டதாகும். இதில் கிளட்ச் அசெம்பிளி மாற்றியமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 6 கியர்களைக் கொண்டதாகும். சீறிப் பாய வசதியாக இதன் எடையைக் குறைக்கும் முயற்சியில் நிறுவனம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. இதன் பலனாக 10 கிலோ வரை எடை குறைந்துள்ளது. இது 97 ஹெச்.பி. திறனை 6,750 ஆர்.பி.எம். வேகத்திலும் 112 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4,950 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 41 மி.மீ. கேட்ரிஜ்ட் போர்க் முன்புறத்திலும், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ட்வின் ஷாக் அப்சார்பர் பின்பகுதியிலும் உள்ளது. முன் சக்கரத்தில் இருபுறத்திலும் டிஸ்க் பிரேக் உள்ளது. இது 305 மி.மீ. விட்டம் கொண்டது. இதில் பைரெலி டியாப்லோ ரோஸோ டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் கார்களில் உள்ளதைப் போன்று மூன்றுவிதமான ஓட்டும் தேர்வு நிலைகள் (வழக்கமான சாலை, மழை நேரம், ஸ்போர்ட்) உள்ளன. அறிமுகமான இந்த மாடல் விரைவிலேயே இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story