தூய்மையான குடிநீருக்கு...
இதில் எத்தகைய குடிநீரை பிடித்தாலும், இது தூய்மையானதாக மாற்றி உங்கள் உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
பெரும்பாலான நோய்க்கு முக்கியக் காரணமே தண்ணீர்தான். குடிதண்ணீரில் கலக்கும் பல்வேறு காரணிகள் நமக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்பான குடிநீருக்கு போகுமிடமெல்லாம் அலைய வேண்டியிருக்கிறது. இந்தக் குறையைப் போக்க உருவாக்கப்பட்டது லைப்ஸ்டிரா பாட்டில். இதில் எத்தகைய குடிநீரை பிடித்தாலும், இது தூய்மையானதாக மாற்றி உங்கள் உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வோர், மலையேற்ற வீரர்கள், சைக்கிளில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் உள்ள சுத்திகரிப்பான் நீரில் பரவும் 99.99 சதவீத பாக்டீரியாவை வடிகட்டிவிடும். அதேபோல நீரில் பரவும் 99.99 சதவீத புரோடோஸோனை தடுத்துவிடும்.
இது அமெரிக்க உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் சான்று பெற்றுள்ளது. மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் எடை 168 கிராம் மட்டுமே. இதை செயல்படுத்த மின்சாரமோ, பேட்டரியோ தேவையில்லை. இது 1,000 லிட்டர் வரை சுத்தப்படுத்தும்.
இதன் விலை ரூ.1,790.
Related Tags :
Next Story