காய்கறி நறுக்க...


காய்கறி நறுக்க...
x
தினத்தந்தி 12 Dec 2018 12:59 PM IST (Updated: 12 Dec 2018 12:59 PM IST)
t-max-icont-min-icon

நேரம் குறைவாக உள்ள போது அதிக குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக அளவிலான காய்கறிகளை நறுக்க பீஜியன் நிறுவனம் தயாரித்துள்ளதுதான் வெஜிடபிள் கட்டர்.

காய்கறிகளை நறுக்குவது, பெண்களுக்கு அலுப்பூட்டும் வேலைகளில் ஒன்று. அவசரமான சமயங்களில், நேரம் குறைவாக உள்ள போது அதிக குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக அளவிலான காய்கறிகளை நறுக்க பீஜியன் நிறுவனம் தயாரித்துள்ளதுதான் வெஜிடபிள் கட்டர். இதற்கு மின்சாரம் தேவையில்லை. 

இதில் மையப் பகுதியில் உள்ள பிளேடு சுழலும் வகையில் உள்ளது. காய்கறிகளை இதனுள் போட்டு இதன் மூடியில் அமைந்துள்ள கயிற்றை இழுத்தால் காய்கறிகள் துண்டு துண்டாக சமையலுக்குத் தயாராகிவிடும். இதை செயல்படுத்துவதும் எளிது. பாதுகாப்பானது. கத்தியால் நறுக்கும்போது கைகளில் காயம் பட வாய்ப்புண்டு. அந்த வகையில் இது பாதுகாப்பானது. இரண்டு அளவுகளில் இது கிடைக்கிறது. விலை ரூ.590.


Next Story