தண்ணீர் மற்றும் மின்சாரம் சேமிக்கும் ஷவர்


தண்ணீர் மற்றும் மின்சாரம் சேமிக்கும் ஷவர்
x
தினத்தந்தி 12 Dec 2018 12:59 PM IST (Updated: 12 Dec 2018 12:59 PM IST)
t-max-icont-min-icon

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவே ஸ்மார்ட் ஷவர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது லிவின் நிறுவனம்.

குளிர் காலங்களில் வெந்நீர் குளியல் போட விரும்புவோர் ஹீட்டரை நீண்ட நேரம் ஆன் செய்து விட்டு மறந்து விடுவர். அல்லது தண்ணீர் குளிர்ந்த நிலையில் இருந்து வெப்ப நிலைக்கு மாறும் வரை ஷவரை திறந்து விடுவார்கள். இதனால் மின்சாரமும் தண்ணீரும் அநாவசியமாக விரயமாகும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவே ஸ்மார்ட் ஷவர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது லிவின் நிறுவனம். இந்த ஷவரில் உங்களுக்கு வேண்டிய வெப்பநிலையை நீங்கள் செட் செய்து கொள்ளலாம். நீங்கள் குளிக்க செல்லும் முன் ஆன் செய்தால் சிறிது நேரத்தில் தண்ணீர் சூடான பின்னர் நிறுத்தி வைத்துவிடும். நாம் உபயோகிக்கும் வரை சூடாகவே இருக்கும். இது மட்டுமின்றி குளிக்கும் போது நமக்கு வேண்டிய இசையை கேட்டுக்கொண்டே குளிக்கும் வசதியும் இதில் உள்ளது. எல்லா ஸ்மார்ட் கருவிகளையும் போன்று ஆப் மூலம் கட்டுப்படும் இந்த ஷவர் உங்கள் குரலின் கட்டளைக்கேற்பவும் செயல்படும். 

வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வெப்பநிலையை தங்கள் பெயருடன் செட் செய்து கொண்டால் அந்த நபர் குளிக்க செல்லும் முன் ஆன் செய்தால் அவருக்கேற்ற வெப்பத்தில் வெந்நீர் வரும்.தண்ணீரை சேமிக்க விரும்புவோருக்கு உதவும் கருவி இது. 600 அமெரிக்க டாலரில் இருந்து இது விற்பனையாகிறது.

Next Story