நடுவப்பட்டி–கோவில்பட்டி–எட்டயபுரம் இடையே புதிய நாற்கர சாலை போக்குவரத்துக்கு திறப்பு


நடுவப்பட்டி–கோவில்பட்டி–எட்டயபுரம் இடையே புதிய நாற்கர சாலை போக்குவரத்துக்கு திறப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 3:30 AM IST (Updated: 12 Dec 2018 4:45 PM IST)
t-max-icont-min-icon

நடுவப்பட்டி–கோவில்பட்டி–எட்டயபுரம் இடையே 31.65 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாற்கரசாலை நேற்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

கோவில்பட்டி, 

நடுவப்பட்டி–கோவில்பட்டி–எட்டயபுரம் இடையே 31.65 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாற்கரசாலை நேற்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

புதிய நாற்கர சாலை 

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் இருந்து விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி வழியாக நெல்லை மாவட்டம் பருவக்குடி வரையிலும் புதிய நாற்கர சாலை திட்டமிடப்பட்டது. இதில் பெரும்பாலான பகுதியில் சாலை அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், நடுவப்பட்டி–கோவில்பட்டி–எட்டயபுரம் இடையேயான 31.65 கி.மீ.க்கு ரூ.167 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2015–ம் ஆண்டு நாற்கர சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

முதல்–அமைச்சர் திறந்தார் 

இந்த சாலை அமைக்கும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இந்த சாலை திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் புதிய நாற்கர சாலையை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார்.

தொடர்ந்து கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு எட்டயபுரம் நாற்கர சாலையில் நடந்த விழாவில் உதவி கலெக்டர் விஜயா பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் நந்தகுமார், நிர்மலா, தாசில்தார் பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கியது.

Next Story