வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ராமன் தகவல்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் நபருக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பயணம் ஜெருசலேம், பெத்லகேம், நாசரேத், ஜோர்டான்நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மததொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. 10 நாட்கள் கொண்ட இப்பயணம் இந்த மாதம் இறுதியில் அல்லது வருகிற ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதுதொடர்பான நிபந்தனைகள், விதிமுறைகள் குறித்து www.bcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். அதில், விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் தபாலில் ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், கல்சமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை–600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இத்திட்டத்தில் புனித பயணம் செய்ய விருப்பமுள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story