தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக இயக்கப்படும் கப்பல்களுக்கு 60 சதவீதம் கட்டண சலுகை வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய் தகவல்
தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக இயக்கப்படும் கப்பல்களுக்கு 60 சதவீதம் சலுகை வழங்கப்படுவதாக, வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக இயக்கப்படும் கப்பல்களுக்கு 60 சதவீதம் சலுகை வழங்கப்படுவதாக, வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ரிங்கேஷ்ராய் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சரக்கு கப்பல் போக்குவரத்து
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கி உள்ளது. இந்த சரக்கு பெட்டக கப்பல் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது. இந்த கப்பலில் இன்று(அதாவது நேற்று) 320 சரக்கு பெட்டகங்கள் வந்து உள்ளன. 260 சரக்கு பெட்டகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த சேவை மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு ஆகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர்களை சந்தித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக சரக்கு ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
60 சதவீதம் சலுகை
இதே போன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் நேரடி கப்பல் சேவை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேரடியாக நீண்ட தூர நாடுகளுக்கு செல்லக்கூடிய பெரிய கப்பல்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தால் 60 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படும்.
இதன் மூலம் அதிக அளவில் கப்பல்கள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் சுற்றுவட்டாரத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது துணைத்தலைவர் வையாபுரி உடனிருந்தார்.
Related Tags :
Next Story