முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாம்பரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி ஆட்டோ சேவை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கி வைத்தார்


முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாம்பரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி ஆட்டோ சேவை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாம்பரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி ஆட்டோ சேவையை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் தொடங்கிவைத்தார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தென்மாவட்டங்களில் இருந்து 42 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், சென்னை-கடற்கரை மற்றும் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமாக 240 மின்சார ரெயில்களும் தினந்தோறும் வந்து செல்கின்றன. அந்த வகையில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் தினந்தோறும் தாம்பரம் ரெயில் நிலையம் வருகின்றனர்.

தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிளாட்பாரங்களில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

அவர்களின் வசதிக்காக பேட்டரியால் இயங்கும் 2 ஆட்டோக்களை வழங்க தெற்கு ரெயில்வே பெண்கள் நல தலைமையகம் முடிவு செய்தது. அதன்படி தாம்பரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி ஆட்டோ சேவை தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.

இதில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரஷ்தா மற்றும் தெற்கு ரெயில்வே பெண்கள் நல தலைமையகத்தின் தலைவர் மான்சி குல்ஸ்ரஷ்தா ஆகியோர் கலந்துகொண்டு பேட்டரி ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தனர்.

பின்னர் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரஷ்தா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாம்பரம் ரெயில் நிலையத்தில் முதல் முறையாக பயணிகள் வசதிக்காக பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் ஏற்கனவே இந்த வசதி உள்ளது. தாம்பரத்தை தொடர்ந்து மற்ற புறநகர் ரெயில் நிலையங்களிலும் பேட்டரி ஆட்டோ சேவையை கொண்டு வர இருக்கிறோம்.

Next Story