திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி போலீஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி
பெரம்பலூர் போலீஸ் நிலைய கழிவறையில் வைக்கப்பட்டிருந்த பினாயிலை குடித்து பிரவீன் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
குன்னம்,
மதுரை ஜெய்ஹிந்புரத்தை சேர்ந்தவர் கண்ணன் என்கிற பிரவீன்(வயது 27). இவர் மீது பல்வேறு திருட்டு, நகை பறிப்பு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பேரளி பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த படைக்காத்து என்பவரை மிரட்டி பணத்தை பறித்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீசார் பிரவீனை கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைப்பதற்காக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் போலீஸ் நிலைய கழிவறையில் வைக்கப்பட்டிருந்த பினாயிலை குடித்து பிரவீன் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார் பிரவீனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story